தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் அனைவரும் தங்களை அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள மிகவும் சிரமப்பட்டனர். அதனைப் போலவே பல மாநிலங்களில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் பலரும் இலவச ரேஷன் பொருட்களை பெற முடியாமல் தவித்தனர்.
அதனால் அரசு நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் ரேஷன் கார்டுகளை வைத்து ரேஷன் பொருட்களை எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக் கொள்ளும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தநிலையில் தமிழகத்தில் இந்த திட்டத்தின் மூலம் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் அளித்துள்ளது.
அதனால் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை முறையாக வழங்கப்பட வேண்டும் எனவும் இதனை மேலும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முழுவதும் உள்ள ரேஷன் கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment