Join THAMIZHKADAL WhatsApp Groups
கீரைகள் என்று மேலும் உணவில் முக்கிய இடம் வைப்பவை. அவற்றில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவற்றின் காரணமாக அடிக்கடி கீரை சாப்பிட்டு வந்தால் உடல் நலமானது நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.
நம் உணவிலே தினமும் ஒரு கீரையை சேர்த்துக் கொள்வது நம் உடலுக்கு பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் வழங்குகிறது . இன்று நாம் மருந்தாக பயன்படும் ஒரு கீரையைப் பற்றி பார்ப்போம்.
மலச்சிக்கல் மனித ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரியாகும். மலச்சிக்கல் நாளடைவில் முத்தி போய் மூல நோயாக மாறுகிறது. துத்திக் கீரையை அம்மனுக்கு எண்ணெயில் வறுத்து அதனை மூலத்தில் கட்டி வர மூல நோயினால் ஏற்படும் வலி குடைச்சல் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாக விளங்கும்.
ஆசனவாயில் கடுமையான வலியுடன் எரிச்சல் இருக்கும் சமயம் கையளவு துதிக்கீரையை எடுத்து 100 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் பால் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வர வழி நிவாரணையாக செயல்படும்.
இந்தக் கீரையானது உடலில் உள்ள தசைகளுக்கு வலுவை அளிப்பதால் இது அதிபலா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இலையில் இருக்கக்கூடிய தாவர கொழுப்புக்களில் உள்ள வேதிப்பொருட்களில் அதிகப்படியான புரதம் மற்றும் வலி நீக்கக்கூடிய நிவாரணிகள் இருக்கின்றன.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் உடல் உஷ்ணம் போன்ற நோய்களுக்கு துத்திக் கீரையை நெய்யில் வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும் . மேலும் இது கருப்பைச் சார்ந்த நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குவதோடு பூஞ்சை தொட்டினால் ஏற்படும் படர்தாமரை நீங்கவும் உதவுகிறது.
துதி இலைகளை நன்றாக கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் வாய் கொப்பளித்து வந்தால் இருகள் மற்றும் பற்களில் ரத்தம் வடிவது கட்டுப்படுத்தப்படும்.
வேப்பங்கட்டி மற்றும் மூலக்கட்டி போன்ற பிரச்சினைகளுக்கு துதி கீரை இலையை நன்றாக அரைத்து அதனுடன் அரிசி மாவு சேர்த்து களி போல கிண்டி அந்த இடங்களில் தடவி வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.
No comments:
Post a Comment