Join THAMIZHKADAL WhatsApp Groups
தொண்டை மற்றும் நெஞ்சில் சளி இருப்பதால் அவதிப்படுபவர்களா நீங்கள்.
அப்பொழுது இந்த பதிவில் இருக்கும் கொய்ய இலை கசாயத்தை தயார் செய்து குடித்து பாருங்கள். உடனே நெஞ்சில் மற்றும் தொண்டையில் இருக்கும் சளி நீங்கும்.
கொய்யப்பழத்தில் எவ்வளவு மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை பற்றி நமக்கு தெரியும். கொய்யாப் பழத்தில் விட்டமின் சி இருப்பதால் கொய்யாப் பழம் நம் உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அளிக்கின்றது. கொய்யாப் பழத்தில் இருக்கும் மருத்துவ குணங்களை விட கொய்யா மரத்தின் இலைகளில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது.
அதாவது கொய்யா இலைகளில் அதிக அளவு சத்துக்கள் உள்ளது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் நியூட்ரியன்ட்ஸ் உள்ளது. கொய்யா இலையில் விட்டமின் சி, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் ஆகியவையும் இருக்கிறது. கொய்யா இலையானது சளி, இருமல், காய்ச்சல், பல் வலி, பல்களின் ஈறுகளில் இரத்தம் வருதல், வாய் துருநாற்றம் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.
இந்த கொய்யா இலையை நன்றாக மென்று சாப்பிடலாம். அல்லது கசாயம் செய்தும் குடிக்கலாம். கசாயம் செய்து குடிக்கும் போது உடலுக்கு தேவையான எதிர்ப்புச் சக்தி கிடைக்கின்றது. மேலும் நெஞ்சில் இருக்கும் சளி, தொண்டையில் இருக்கும் சளி ஆகியவை வெளியேறும்.
கொய்யா இலை கசாயம் செய்யும் முறை
கொய்யா இலை கசாயம் செய்ய ஒரு கைப்பிடி அளவு கொய்யா இலையை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த இலைகளில் உள்ள நார்களை தனியாக எடுத்து இலைகளை சிறிது சிறிதாக வெட்டி வைக்கவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை உற்றி அத்துடன் பிரித்து வைத்துள்ள கொய்யா இலைகளை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இரண்டு ஏலக்காய், குறுமிளகு 3லிருந்து 5, லவங்கம் 2, இஞ்சி சிறிதளவு தோல் நீக்கியது எடுத்து இந்த நான்கையும் நன்றாக இடித்து பேஸ்ட் ஆக்கி கொய்யா இலை கொதித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
இரண்டு நிமிடங்களில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும். சுவைக்காக இதில் சிறிது வெல்லத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதில் வெல்லத்தை சேர்க்க கூடாது. நன்றாக கொதித்த பிறகு இறக்கி வைத்து வெதுவெதுப்பாக வரும் வரை ஆற வைத்து பிறகு இஈதை குடிக்கலாம்.
இந்த கசாயத்தை இரவு தூங்கச் செல்லும் முன் ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு செய்து குடிக்க வேண்டும். இந்த கசாயத்தை செய்து குடித்தால் நெஞ்சு சளி, தொண்டை சளி, கபம் எல்லாம் வெளியேறும்.
No comments:
Post a Comment