Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 22, 2023

அனைத்துப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை குறிக்கோளாகக் கொண்டு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. 

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலை இலவச உணவு வழங்கப்படுகிறது. 1,547 அரசு ஆரம்பப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. 

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு உரிய முறையில் காலை உணவு வழங்கவும் அவர்கள் பசியின்றி இருப்பதை உறுதி செய்யவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News