Join THAMIZHKADAL WhatsApp Groups
முதல் நாள் வடித்த சாதத்தை நீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மூடி வைக்கவும் மறுநாள் காலை அதை தயிர் அல்லது மோர் சேர்த்து சோறாகவோ, வெந்தயம், வெங்காயம் சேர்த்து கஞ்சியாகவோ குடிப்பது நம் முன்னோர் வழக்கம்.அதனால் வெயில் காலத்தில் கூட அவர்கள் பெரிய நோய்கள் வராமல் தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
நடுவில் மறந்திருந்த இந்த பழக்கம் தற்போது பல ஆய்வுகள் சொல்வதன் மூலமும், அதன் பயன் தெரிந்தும் மீண்டும் பழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளது.
பழைய சோற்றிற்கு சம்பா அரிசியை வடித்து நீர் ஊற்றி மறுநாள் எடுத்துக் கொள்வது மிக நல்லது.அன்றைய நாளுக்கான எனர்ஜியை த் தந்து , இளமையோடு இருக்க உதவி புரிகிறது.
உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் இந்தப்பழைய சோற்றுக்கு உண்டு. இந்த சோற்றில் பி-6,12 ஆகிய வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன.இதனால் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை கொடுக்கிறது . பழைய சோறு, அல்லது நீராகாரம் சாப்பிடுவதால் சிறுகுடலில் உருவாகும் பாக்டீரியாக்களை அழித்து, உள் உறுப்புகளை பலப்படுத்துகிறது.
நோய் உண்டாக்கும் கிருமிகளை அழித்து உடலை சுறுசுறுப்பாக இயங்க உதவிடுகிறது.காலையில் சாப்பிடும் சோறு எளிதில் ஜீரணமாகி விடும்.அது வயது முதிர்ந்த தோற்றத்தையும், எலும்பு சம்பந்தமான நோய்களையும் நீக்கும்.
ஜீரண உறுப்புகள் மற்றும் ரத்த நாளங்களில் குறைபாடுகளைக் போக்குகிறது.
மலச்சிக்கலை நீக்கும் மந்தநிலை மாறி எப்போதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அல்சர் பிரச்சினையைப் போக்கி உடலுக்கு இளமை தோற்றத்தைத் தருகிறது.வயதாவதை தள்ளி போக செய்து முக சுருக்கம், உடல் தொய்வாவதை தடுக்கிறது.
இவ்வாறு பல வகைகளில் பலனளிக்கும் பழைய சோறு அல்லது நீராகாரம் சாப்பிட்டு ஆரோக்கியம் காப்போம்.
No comments:
Post a Comment