Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 23, 2023

பேய் போல நம்மை துரத்தும் நோய்களிடமிருந்து தாய் போல காக்கும் இந்த பயிறு .

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக பயிறு வகைகள் நமக்கு நன்மை செய்யும் .பயிறு வகைகளில் பச்சை பயிறு முதல் கொண்டை கடலை வரை நம் ஆரோக்கியத்துக்கு வழி செய்யும் .அந்த வகையில் இந்த பதிவில் பச்சை பயிறு மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்

1.சிறு குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியோர்கள் என அனைவருக்கும் பயறு வகைகள் நன்மை செய்யும்

2.அதே சமயம், அந்த பயிறு வகைகளை அளவாக சாப்பிடணும் .அதிகமாகச் சாப்பிடுவது நல்லது அல்ல.

3.பொதுவாக சைவ உணவு சாப்பிடுபவர்கள், ஏதேனும் ஒரு வகை பயறை 50 கிராம் தினமும் எடுத்துக்கொள்வது அவர்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது .

4.மேலும் இந்தப் பயறுகளைச் சுண்டலாக சமைத்துச் சாப்பிடுவது மிகவும் நல்லது!

5.அது மட்டுமல்லாமல் ஒருவரின் எலும்பு வளர்ச்சிக்கும், ரத்த ஓட்டத்துக்கும், வளர்ச்சிக் குறைபாடு உள்ள குழந்தைகளின் தசைகளை வலுவாக்குவதற்கும் இந்த பச்சைப் பயறு ஏற்றது ஆகும் .

6.மேலும் இந்த பயிறு மலச் சிக்கலைப் போக்கும் ஆற்றல் கொண்டது .

7.இந்த பச்சை பயறில் புரதம், கலோரி, பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், பொட்டாஷியம், நார்ச் சத்து ஆகியவை அதிக அளவில் இருக்கின்றன.

8.இந்த பச்சை பயிரில் மாவுச் சத்து, கொழுப்பு, கோலின், பீட்டா கரோட்டின், கால்சியம், இரும்பு, மெக்னீஷியம், தாமிரம், சோடியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன.

9.மேலும் இந்த பச்சை பயிரை இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

10.ஆனால் இந்த பச்சை பயிரில் பொட்டாஷியம், பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால், சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News