தேங்காய் நம்மில் பலருக்கு பிடிக்கும். வீட்டில் நொறுக்கு தீனி எதுவும் இல்லாத பட்சத்தில் தேங்காய் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.
தேங்காய் வைத்து எளிதில் செய்யக்கூடிய ஒரு ரெசிபி ( தேங்காய் லட்டு ) பற்றி கூறுகிறோம். உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் மூடி - 2.
பால் -1 கப்.
நெய் - 1 தேக்கரண்டி.
ஏலக்காய் - 8.
சர்க்கரை - 1 ஸ்பூன்.
வெல்லம் - தேவையான அளவு.
செய்முறை :
லட்டு செய்வதற்கு முன்னதாக, எடுத்துக்கொண்ட தேங்காயினை நன்கு துருவி தேங்காய் துருவல் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்ந்து அடித்து, ஏலக்காய் பொடி தயார் செய்து தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.
இதேப்போன்று எடுத்துக்கொண்ட வெல்லத்தினையும் பொடியாக இடித்து, தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தற்போது கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடேற்றவும். நெய் நன்கு உருகியதும் தேங்காய் துருவல் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்க வேண்டும்.
தொடர்ந்து பால் மற்றும் வெல்லம் சேர்ந்து, வெல்லம் நன்கு கரையும் வரை மிதமான சூட்டில் வதக்க வேண்டும்.
5 - 7 நிமிடங்களுக்கு பின்னர், இதில் அரைத்து வைத்த ஏலக்காய் பொடி சேர்ந்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். பின்னர் இந்த சேர்மத்தை சிறிது நேரம் ஆறவிடவும்.
மிதமான சூட்டில் இருக்கும் இந்த சேர்மத்தை தற்போது உருண்டையாக பிடித்து வைக்க சுவையான தேங்காய் லட்டு ரெடி!... இதன்போது நீங்கள் முந்திரி பருப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment