Join THAMIZHKADAL WhatsApp Groups
லெமன் சோடா அஜீரணம், வயிற்று மந்தம் போன்ற உபாதைகளுக்காக குடிப்பதுண்டு. சிலர் ஜூஸ் வகைகளில் லெமன் சோடாவை விரும்பி குடிப்பார்கள்.
அந்த வகையில் வெயில் காலத்தில் லெமன் சோடாவை அதிகமாக குடிக்க நேர்ந்தால் அதை வீட்டிலேயே சரியான பக்குவத்தில் இப்படி செய்து குடியுங்கள்.
தேவையான பொருட்கள் :
எலுமிச்சை - 4
சர்க்கரை 2 tsp
உப்பு - 1/4 tsp
குளிர்ந்த நீர் - 1/4 கப்
சோடா - 1 கப்
ஐஸ் க்யூப்ஸ் - சில
செய்முறை :
முதலில் எலுமிச்சை சாறை தனியாக பிழிந்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
கிளாஸில் எலுமிச்சை சாறு , உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
பின் கால் கப் தண்ணீர் சேர்த்து கலந்துவிடுங்கள். உப்பும் , சர்க்கரையும் கரையும் வரை கலக்குங்கள்.
பின் சோடா மற்றும் ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்துவிடுங்கள்.
அவ்வளவுதான் லெமன் சோடா தயார். தேவைப்பட்டால் அதன் மேலே புதினா மற்றும் எலுமிச்சை ஸ்லைஸ் சீவி அதன் மேல் வைத்து அலங்கரித்து குடிக்கலாம்.
No comments:
Post a Comment