Join THAMIZHKADAL WhatsApp Groups
நுரையீரலில் இருகி கட்டியாக இருக்கும் சளியால் பல பிரச்சனைகள் நமக்கு வரலாம்.
அவ்வாறு நுரையீரலில் இருக்கும் சளியை வெளியே கொண்டு வருவதற்கு ஒரு அற்புதமான மருந்தை இந்த பதிவில் காணலாம்.
செய்ய தேவையான பொருட்கள்
* கருஞ்சீரகம்
* துளசி இலை
* துளசி வேர்
* துளசி பூ
* ஓமவல்லி இலை
* கற்பூரவல்லி இலை
* சங்குப்பூ
* நாட்டுச் சர்க்கரை
* வெங்காயம்
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த தண்ணீரில் எடுத்து வைத்துள்ள கருஞ்சீரகம், துளசி இலை, துளசி பூ, துளசி வேர், கற்பூரவல்லி இலை, ஓமவல்லி இலை, சங்குப்பூ எல்லாவற்றையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
இதில் சுவைக்காக நாட்டு சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் சிறிது அளவு வெங்காயத்தை நறுக்கி சேர்த்துக் கெள்ள வேண்டும். பின்னர் நன்றாக கொதிக்க வைத்து பின்னர் இறக்கி இதை வடிகட்டி குடித்தால் போதும். நுரையீரலில் இருக்கும் சளி அப்படியே கரைந்து வெளியே வந்துவிடும்.
No comments:
Post a Comment