Join THAMIZHKADAL WhatsApp Groups
மின்வாரிய துறைக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் மின்சார வாரியம், ஆவின் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நிகழ்ந்து வந்தன.
இந்நிலையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் ஓட்டுநர் பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, தற்போது மின்சாரத் துறைக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அந்த வகையில், மின்சாரத் துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்து 260 இடங்களில் முதற்கட்டமாக 200 டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிகளுக்கான ஆட்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment