Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ் 2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாணவி எஸ்.நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார். அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் எடுத்து திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.நந்தினி அசத்தியுள்ளார்.
சரவணக்குமார் - பானுப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி அனைத்து பாடங்களிலும் சதம் எடுத்து அபார சாதனை புரிந்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் மாணவி ஒருவர் 600-க்கு 600 மதிப்பெண் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து பேட்டியளித்த மாணவி எஸ்.நந்தினி; எனது தந்தை கூலித் தொழிலாளி; படிப்புதான் ஒரே சொத்து என கூறி பெற்றோர் என்னை வளர்த்தனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் அளித்த ஊக்கத்தால்தான் சாதனை படைக்க முடிந்தது என்றார்.
மேலும் தான் ஆடிட்டராக விரும்புவதாக கூறினார். சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதே எனது ஆசை; அதற்காகவே கடினமாக படித்தேன் எனவும் மாணவி எஸ்.நந்தினி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment