Join THAMIZHKADAL WhatsApp Groups
மார்ச் / ஏப்ரல் 2023 - ல் நடைபெற்ற 2022-2023 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) காலை 10.00 மணிக்கும் , மேல்நிலை முதலாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 ( வெள்ளிக்கிழமை ) பிற்பகல் 200 மணிக்கும் வெளியாகும்.
தேர்வு முடிவுகள் இயக்குநரகத்திலேயே வெளியிடப்படுவதால் செய்தியாளர் சந்திப்பு ஏதுமில்லை என்ற விவரமும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
செய்தியாளர்கள் பகுப்பாய்வு அறிக்கையினை https://dge.tn.nic.in என்ற இணையதளத்தில் நாளை ( 19.05.2023 ) காலை 10.00 மணிக்கு பத்தாம் வகுப்பிற்கும் பிற்பகல் 2.00 மணிக்கு மேல்நிலை முதலாமாண்டிற்கும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் மேலும் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கும் பகுப்பாய்வு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.
No comments:
Post a Comment