Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 16, 2023

பத்து நாளில் 10 கிலோ வரை எடை குறைக்கலாம்!! இதை சாப்பிட்டுங்க!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
உடல் பருமன் என்றால் உடல் எடை அதிகமாக இருப்பதுதான். இந்த உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் பலவிதமான மருந்துகள், சிகிச்சைகள் எடுத்தும் பயனில்லாமல் போயிருக்கும். உடல் எடை குறைவது போல குறைந்து மீண்டும் அதிகரிக்கும். என்ன செய்தாலும் உடல் எடையை குறைக்க முடியாமல் தவிப்பவர்களுக்கு இந்த பதிவில் உடல் எடையை குறைக்க உதவும் அருமையான உணவு பற்றி பார்க்க போகிறோம். இந்த மருந்தை எவ்வாறு தயார் செய்வது எப்படி சாப்பிடுவது என்று இந்த பதிவில் காணலாம். இதை மருந்து என்று சொல்வதை விட காலை உணவு என்று கூறலாம்.

உடல் எடையை குறைக்கக் கூடிய உணவை தயார் செய்ய தேவையான பொருட்கள்.

* வெங்காயம்

* குறுமிளகு

* சீரகம்

* கேப்பை மாவு

இந்த உணவை தயார் செய்யும் முறை.

வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு மிளகு சீரக்கதை இடித்துக் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு எடுத்து வைத்துள்ள கேப்பை மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரம் வைத்து அதில் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சூடான பிறகு சிறிதளவு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து இதில் சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் ஏற்கனவே தட்டி வைத்துள்ள மிளகு சீரகப் பொடியை சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். இறுதியாக இதில் கரைத்து வைத்துள்ள கேப்பை மாவை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை லேசான தீயில் கொதிக்க வைக்க வேண்டும். அதிக தீயில் இதை தயார் செய்தால் அடிபிடித்து விடும். அதனால் இதை லேசான தீயில் கொத்திக்க விடவும். இதை ஒரு கரண்டியை வைத்து நன்கு கலக்கி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். நன்கு கூழ் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பிலிருந்து இறக்கி விடவேண்டும்.

இந்த கேப்பை கூழில் சிறிதளவு மோர் சேர்த்துக் குடிக்கலாம். அல்லது இதை களியாக செய்தும் சாப்பிடலாம். கேப்பை கூழ் அல்லது களி இரண்டில் எதை சாப்பிட்டாலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையத் தொடங்கும். கெட்டக் கொழுப்புகள் கரையத் தொடங்கினால் உடல் எடை தானாக குறையத் தொடங்கும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News