Join THAMIZHKADAL WhatsApp Groups
1600 காலி பணி இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநில அரசு வேலைக்கு தயாராகும் தமிழக இளைஞர்கள், மத்திய அரசு வேலை வாய்ப்பை அத்தனை சிரத்தையாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால தவற விடாமல் அப்ளை பண்ணுங்க.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி லோவர் டிவிஷன் கிளார்க், ஜூனியர் செக்ரட்ரியேட் அசிஸ்டன்ட், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்ஸ் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கான CHSL 2023 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு முறை : கணினிவழி தேர்வு, விரிவான தேர்வு மற்றும் திறனறிதல் தேர்வு
கல்வித் தகுதி :12ம் வகுப்பு தேர்ச்சி
வயது :18 முதல் 27 வயது வரை குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வும் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை :
அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் பதிவு எண் மற்றும் பாஸ்வோர்ட்டை உள்ளீடு செய்ய வேண்டும்.
APPLY என்ற பகுதியில் கிளிக் செய்ய வேண்டும். Combined Higher Secondary (10+2) Level Examination, 2023 என்ற அறிவிப்பில் கிளிக் செய்ய வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை தெளிவாக பூர்த்தி செய்ய தேவையான சான்றிதழ்களை உள்ளீடு செய்யவேண்டும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விண்ணப்பத்தை பதிவிடவேண்டும்.
விண்ணப்ப கட்டணம்..
CHSL 2023 தேர்வுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ100
No comments:
Post a Comment