Join THAMIZHKADAL WhatsApp Groups
94.03% சதவீத மாணவர்கள் தேர்ச்சி
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 97% வெற்றி பெற்று தமிழ்நாடு அளவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பெற்றுள்ளது
தமிழகத்திலேயே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 2 வது திருப்பூர் மாவட்டம் , 3 வது பெரம்பலூர் மாவட்டம் இடம் பிடித்துள்ளது
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை அறிவிக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்.
தமிழகத்தில் தேர்தல் முடிவுகளின் படி 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை இணையதளத்திலும் மாணவர்கள் படித்த பள்ளிகளிலும் பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்வில் மாணவர்கள் 91.45%, மாணவிகள் 96.38% பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment