Join THAMIZHKADAL WhatsApp Groups
ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான கணினி வழி தேர்வு 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட ஒருங்கிணைந்த நூலக பணிகள் மற்றும் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்வு 13.05.2023 அன்று (முற்பகல் மற்றும் பிற்பகல் ) மற்றும் 14.05.2023 அன்று (முற்பகல்) நடைபெற உள்ளது.
தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் ( Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவின் விவரப்பக்கம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியும்.
No comments:
Post a Comment