Join THAMIZHKADAL WhatsApp Groups
ஆதார் மத்திய அரசால் வழங்கப்படும் மிக முக்கிய அடையாள அட்டையாகும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிப்பது அவசியமாகிறது.
உங்கள் ஆதார் டேட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆதாரின் Demographic தரவுகளை ஜுன் 14 வரை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
அதாவது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், இமெயில் ஆகியவற்றை அப்டேட் செய்து உறுதி படுத்துவது ஆகும். நினைவில் கொள்ளுங்கள் ஆதார் அப்டேட் செய்வது வேறு திருத்தம் செய்வது வேறு. ஆதார் அப்டேட் (Demographic தரவுகள் ) மட்டுமே நீங்கள் ஆன்லைனில் செய்ய முடியும். ஆதார் திருத்தம் செய்ய உங்கள் முகவரி மாற்றம் செய்ய, புகைப்படம் மாற்ற, மொபைல் எண் மாற்ற என மற்ற சேவைகளுக்கு ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உங்கள் கைரேகை ஸ்கேன் ( Biometric) செய்யப்படும் அதன் பின் தான் எந்த தரவையும் மாற்ற முடியும்.
ஆன்லைனில் இலவசமாக ஆதார் எவ்வாறு அப்டேட் செய்வது?
பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், இமெயில் ஆகியவற்றை அப்டேட் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment