Join THAMIZHKADAL WhatsApp Groups
தேசிய அளவிலான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. தேர்வில் 18 லட்சத்து 87 ஆயிரம் பேர் நேற்று பங்கேற்றனர்.
எனினும் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மிகக் கடினமாக இருந்தது. இதனால் அந்த கேள்விகளை எழுத முடியவில்லை என்று மாணவ-மாணவியர் தெரிவித்தனர். தேசிய தேர்வு முகமை நடத்தும் 'நீட்' தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 341 மாணவ- மாணவிகள் பதிவு செய்திருந்தனர்.
நாடு முழுவதும் 499 நகரங்களில் இத்தேர்வு நேற்று நடந்தது. முன்னதாக தேர்வு நடக்கும் நகரங்கள், தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ள தகவல்கள், கடந்த மாதம் 27ம் தேதி தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தது.
அதன் தொடர்ச்சியாக மே 3ம் தேதி முதல் ஹால்டிக்கெட்டுகளை விநியோகம் செய்யப்பட்டது. அதில் மேற்கண்ட 499 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் தொடர்பான விவரங்களும் இருந்தன.
தேசிய தேர்வு முகமை அறிவித்தபடி, நேற்று மதியம் நீட் தேர்வு தொடங்கியது. முன்னதாக 1.30க்குள் மாணவ- மாணவியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு இருந்த மையங்களுக்கு குறித்த நேரத்தில் வர வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று மதியம் 1.30 மணி வரை தேர்வு மையங்களில் மாணவ-மாணவியர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக, மாணவ-மாணவியரிடம் கடுமையான சோதனைகள் நடத்திய பிறகே அவர்கள் தேர்வு எழுதும் அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். எலக்ட்ரானிக் சாதனங்கள், பெரிய அணிகலன்கள், மற்றும் ஷூ, டை, போன்றவைக்கு வழக்கம்போல அனுமதியில்லை. எழுத்து தேர்வு என்பதால் ஹால்டிக்கெட், பேனா மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத மொத்தமாக 20 லட்சத்து 87 ஆயிரம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளதாக தேர்வு முகமை அறிவித்தது. இந்நிலையில் அவர்களில் 11 லட்சத்து 80 ஆயிரம் பேர் மாணவியர், 9 லட்சத்து லட்சம் பேர் 20 ஆயிரம் பேர் மாணவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மாணவர்களை விட மாணவியர்தான் நீட் தேர்வில் அதிக அளவில் பங்கேற்றனர். குறிப்பாக கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில், 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களில் 15 ஆயிரம் பேர் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 31 நகரங்களில் தேர்வு நடந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 28 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. எழுத்து தேர்வு முறையிலான தேர்வு 13 மொழிகளில் நடந்தது.
நேற்று மாலை 5.30 மணி அளவில் தேர்வு மையங்களில் இருந்து வெளியேறிய மணவ, மாணவியர் தேர்வு பற்றி கூறியதாவது:
தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் இயற்பியல், வேதியியல் பாடப் பிரிவுகளில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடிமாக இருந்தன.
விலங்கியல், உயிரியல் பாடப் பிரிவுகளில் இடம்பெற்றவை எளிதாக இருந்தது. கேள்விகள் பெரும்பாலும் பாடப் பகுதியில் இருந்தே கேட்கப்பட்டது. சில கேள்விகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெற்று இருந்தது. இந்த இரு விடைகளால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment