Join THAMIZHKADAL WhatsApp Groups
இன்றைய காலகட்டத்தில் உணவு முறை பழக்க வழக்கங்கள் மாறிவிட்ட நிலையில் நிறைய பேர் உடல் பருமனால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இயற்கை வழியில் உடல் எடையை குறைக்க சில எளிமையான வழிமுறைகளை பார்க்கலாம்.
கற்பூரவல்லி நறுமணமுள்ள மூலிகை. இது ஆரோக்கிய நன்மைகள் அதிகம் கொண்டுள்ளன. சளி இருமல் சிகிச்சைக்கு கற்பூரவல்லி கை கண்ட மருந்து. மேலும் இது ஆஸ்துமா, காய்ச்சல், நரைமுடி மற்றும் பொடுகு போன்றவற்றுக்கும் சிகிச்சையளிக்க உதவுகிறது.
கற்பூரவல்லி அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும், இளமைக்கும் ஆப்பிளை விட சத்துக்களை கொடுக்க கூடியது. கொழுப்பு நோயுள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் 4-5 இலைகளை மென்று சாப்பிட்டு வருகையில் கொழுப்பு கரைந்து உடல் பருமன் குறையும். உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். நோயற்ற வாழ்க்கையை வாழ கற்பூரவல்லி பெரிதும் உதவும்.
தேவையான பொருள்கள்:
1. கற்பூரவள்ளி
2. இஞ்சி
3. புதினா இலை
4. தயிர்
5. எலுமிச்சை பழம்
6. தேன்
செய்முறை:
முதலில் மிக்ஸி ஜாரில் கற்பூரவள்ளி இலை ஐந்து, இஞ்சி சிறிய துண்டு, புதினா இலை சிறிதளவு, தயிர் ஒரு டம்ளர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அரைத்த கலவையுடன் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் சேர்த்து குடித்து வருகையில் உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும்.
உடல் பருமன் குறைப்பது மட்டுமல்லாமல் சளி மற்றும் காய்ச்சல் என்பது வரவிடாமல் தடுக்கிறது. கற்பூரவள்ளி இலையை பயன்படுத்தி இதில் உள்ள நன்மைகளை பெற்று மகிழுங்கள்.
No comments:
Post a Comment