Join THAMIZHKADAL WhatsApp Groups
சமீபத்தில் நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வில், தோல்வியடைந்த மாணவர்கள் துணைத் தேர்வுகளுக்கு உடனடியாக எழுத இம்மாதம் மே 17ம் தேதி தான் கடைசி தேதி.
அதனால மாணவர்களே ஒரு பாடத்தில், இருபாடங்களில் தோல்வி என்பது எல்லாம் பெரிய பின்னடைவு கிடையாது. உடனே துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தால், ஒரு வருடத்தை வீணாக்காமல் உடனடியாக தேர்ச்சியடைந்து கல்லூரிகளில் சேரலாம். துணைத் தேர்வுகளின் முடிவுகள் வெளியாகும் வரையில் கல்லூரிகளில் அட்மிஷன் நடைப்பெற்று கொண்டிருக்கும்.
இம்மாதம் மே 17ம் தேதிக்கு பின்னர் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்தால் தட்கல் முறையில் தான் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், ரூ.1000 கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும். அதனால உடனடியா துணைத் தேர்வுக்கான விண்ணப்பத்தை செலுத்துங்க. அதே போன்று, நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் வராவிட்டால், கொஞ்சமும் யோசிக்காமல் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, உங்கள் விடைத்தாள்களின் நகலைப் பெற்று மதிப்பெண்களைச் செக் செய்து பார்க்கலாம். மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே கடைசி தேதி என்பதையும் கவனத்துல வெச்சுக்கோங்க.
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சியடையாத மாணவர்கள் ஒரு வருட கல்வி வாழ்க்கையை வீணாக்காமல் இருப்பதற்காக உடனடியாக கல்லூரிகளில் சேர்வதற்கு வசதியாக அந்த பாடத்தின் தேர்வை மீண்டும் எழுத இந்த துணைத் தேர்வு வாய்ப்பு வழங்கப்படுகிறது. 12ம் வகுப்பில் தேர்ச்சி என்பது வாழ்க்கையே அல்ல. இதைப் பெற்றோர்கள் புரிந்து கொண்டு தங்களது பிள்ளைகளை வழி நடத்த வேண்டும். அவர்களுக்குள் உள்ள பயத்தைப் போக்க வேண்டும். மீண்டும் அவர்களைத் தேர்வு எழுத உற்சாகப்படுத்தி, நம்பிக்கை அளிக்க வேண்டும்.
ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சியடையாதவர்கள் மே 17ம் தேதி வரை துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளமான https://dge.tn.gov.in இணையதளத்தை அணுகலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தங்களது மதிப்பெண்களை மறு ஆய்வு செய்ய விரும்பும் மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். விடைத்தாள் நகல்களை பெறுவதற்கான கட்டணம் ரூ.275 எனவும் மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்திற்கு ரூ.305 எனவும், பிற பாடங்களுக்கு ரூ.205 என்ற வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களுக்கு மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் அல்லது தாங்கள் பயின்ற பள்ளிகளில் விசாரித்து அறிந்து கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க இன்றே மே 13ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment