Join THAMIZHKADAL WhatsApp Groups
பி.இ., பி.டெக்., பி.ஆர்க் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் இன்று(மே 5) தொடங்கியுள்ளது.
இதன்படி, அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் சேர www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளம் மூலமாகவும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பொயியியல் சேர்க்கை சேவை மையத்திலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பொறியியல் படிப்புகளுக்கு இன்று முதல் வருகிற ஜூன் 4 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்,
சான்றிதழ்களை பதிவேற்ற ஜூன் 9 ஆம் தேதி கடைசி நாள் ரேண்டம் எண் ஜூன் 7 ஆம் தேதி வெளியிடப்படும்,
சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை நடைபெறும், தரவரிசைப்பட்டியல் ஜூலை 12 ஆம் தேதி வெளியிடப்படும்.
கலந்தாய்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி தொடங்குகிறது, ஆகஸ்ட் 2 முதல் 5 வரை சிறப்புப் பிரிவினருக்கும் பின்னர் ஆகஸ்ட் 7 முதல் செப்டம்பர் 24 வரை பொதுப்பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 8 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment