Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்2 தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. இதையடுத்து அன்றைய தினமே தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு சேர்க்கை விண்ணப்ப பதிவு ஆன்லைனில் தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 164 கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இளநிலைப்பட்ட படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இதில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை பதிவு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தொடங்கியது. தனியார் கல்லூரிகளைவிட அரசு கல்லூரிகளில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் பலர் அரசுக்கல்லூரிகளில் சேர்ந்து பயில ஆர்வம் காட்டுகின்றனர்.
மேலும் அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு அரசுக்கல்லூரிகளில் புதுமைப்ெபண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுவதாலும் மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் ஆன்லைன் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதையடுத்து சேர்க்கை கலந்தாய்வு வருகிற 25ம் தேதி முதல் தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தொடங்கி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10 தினங்களுக்குள் சேர்க்கை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளான 25ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து அந்தந்த கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டங்களுக்கு ஏற்ப கலந்தாய்வு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைப்படி நடைபெற உள்ளது. நெல்லையில் பழமைவாய்ந்த ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 15 இளநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இதில் பயில 1,176 இடங்கள் உள்ளன. இங்கும் ஆயிரக்கணக்கான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
No comments:
Post a Comment