Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 12, 2023

பகுதிநேர பிஇ, பிடெக் படிப்புகள் - மே 26-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை தொழில்நுட்பக் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, திருச்சி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மற்றும் பண்ருட்டி பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் பகுதிநேர படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இணையவழியில் தற்போது நடைபெற்று வருகிறது.

அதன்படி, பகுதிநேர பிஇ, பிடெக் (4 ஆண்டு) படிப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக மே 26-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 044-2235 8314/358276 என்ற தொலைபேசி எண் அல்லது dircfa@annauniv.edu என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News