Join THAMIZHKADAL WhatsApp Groups
சொத்தைப் பல், பல் வலி போன்ற பிரச்சனைகளை சரி செய்ய நிரந்தர தீர்வாக அற்புதமான மருந்தை இந்த பதிவில் எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
சொத்தை பல் எதனால் வருகின்றது என்றால் நாம் உணவு உண்டபின் நம் பற்களை சரியாக சுத்தம் செய்யாமல் விட்டுவிடுகிறோம். அதானல் கிருமிகள் பற்களின் இடுக்குகளில் சேர்ந்து கொள்கின்றது.
இந்த கிருமிகள் பற்களின் இடுக்குகளில் சேர்ந்து கொள்வதால் சொத்தைப் பல் உருவாகின்றது. இந்த சொத்தை பற்களால் பல் வலியும் ஏற்படுகின்றது. இந்த சொத்தை பற்களை எவ்வாறு சரிசெய்யவும், பல் வலியை சரி செய்யவும் சிறப்பான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்
* சீதா பழ இலைகள்
* பெருங்காயப் பொடி
* நாட்டுச் சுண்ணாம்பு
செய்முறை
முதலில் மூன்று சீதாப் பழ இலைகளை எடுத்து நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதை சிறுசிறு துண்டுகளாக பிரித்து ஒரு உரலில் போட்டுக் கொள்ளவும். பிறகு பெருங்காயப் பொடி சிறிதளவு அந்த உரலில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு வெற்றிலைக்கு பயன்படுத்தப்படும் சுண்ணாம்பும் சிறிதளவு அதில் சேர்த்துக் கொள்ளவும்.
மூன்று பொருள்களையும் சேர்த்த பிறகு நன்றாக இடித்துக் கொள்ளவும். பேஸ்ட் பதத்திற்கு வரும் வரையில் இடித்து பேஸ்ட் பதத்திற்கு வந்த பிறகு எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை ஒரு டூத் பிரஸ் அல்லது உங்களது ஆட்காட்டி விரலில் சிறதளவு எடுத்து சொத்தைப் பல் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும்.
2 நிமிடம் வரை இதை இப்படியே வைக்க வேண்டும். சொத்தை பல்லில் இருக்கும் புழுக்கள் தானாகவே வெளியே வந்துவிடும்.
இந்த மருந்தை சிறிய உருண்டையாக உருட்டி அந்த உருண்டையை செத்தை பல் இருக்கும் இடத்தில் வைத்தால் சொத்தை பல்லால் ஏற்படும் வலி குறைகிறது. இரண்டு நிமிடங்கள் கழித்த பிறகு இதை வெளியே துப்பிவிட்டு நல்ல தண்ணீரால் வாய் கொப்பளிக்க வேண்டும். இந்த மருந்தை கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்தக் கூடாது.
இரண்டாது சுலபமான மருந்து தயார் செய்யும் முறை:
நம் வீட்டில் இருக்கும் கற்றாலை மடலை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிய துண்டை வெட்டி அதில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
சொத்தைப் பல் இருக்கும் இடத்தில் கற்றாழை ஜெல்லை சிறிய உருண்டையாக உருட்டி வைக்க வேண்டும். இதை இரண்டு நிமிடம் வைத்து இரண்டு நிமிடம் கழிந்த பிறகு துப்பி விட வேண்டும். இதை செய்வதால் சொத்தைப் பல்களில் இருக்கும் புழுக்கள் செத்து விடும். பல் வலியும் குறையும்.
No comments:
Post a Comment