Join THAMIZHKADAL WhatsApp Groups
நீங்கள் தீராத மூட்டுவலியால் தினமும் வேதனையை அனுபவித்து வருகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது.
இந்த பதிவில் மூட்டு வலி, கை வலி, கால் வலி, முதுகு வலி போன்றவற்றை சரிசெய்ய அற்புதமான மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
கை வலி, கழுத்து வலி, மூட்டு வலி, முழங்கால் வலி, கால் வழி, முதுகு வலி போன்றவை இருப்பதால் அன்றாட வேலைகளை கூட செய்ய முடியவில்லை. இந்த அத்தனை வலிகளுக்கும் சரியான தீர்வுதான் இந்த ஆயுர்வேதிக் தைலம். இந்த ஆயுர்வேதிக் தைலத்தை எவ்வாறு செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
ஆயுர்வேதிக் தைலம் செய்ய தேவையான பொருள்கள்
* கடுகு எண்ணெய் - 100 மி.லி
* பூண்டு - 10 பல்
* ஓமம் - ஒரு ஸ்பூன்
* மிளகு - ஒரு ஸ்பூன்
* கிராம்பு(இலவங்கம்) - ஒரு ஸ்பூன்
* பிரியாணி இலை - ஒன்று
செய்முறை
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் சிறிய பாத்திரம் ஒன்றை வைத்துக் கொள்ளவும். அந்த பாத்திரத்தில் 100 மி.லி அளவு கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் எடுத்து வைத்துள்ள பூண்டு, கிராம்பு, மிளகு, ஓமம் ஆகிய பொருள்களை ஒவ்வொன்றாக சேர்த்துக் கொள்ள வேண்டும். கடைசியாக பிரியாணி இலையை சிறிய சிறிய துண்டுகளாக பிரித்து இதில் சேர்க்க வேண்டும்.
எண்ணெயின் நிறம் மாறியுள்ளதை பார்க்க முடியும். அதே போல பூண்டின் நிறமும் மாறி இருக்கும். இந்த நிலை வந்த பிறகு அடுப்பிலிருந்து இதை இறக்கி ஆறும் வரை வைத்துவிட வேண்டும். ஆறிய பிறகு இந்த எண்ணெய்யை வடிகட்டி காற்று புகாத பாட்டிலில் ஊற்றி ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
கழுத்து வலி, முதுகு வலி, கை வலி, கால் வலி மட்டுமல்ல உடலில் எந்த இடங்களில் வலி இருந்தாலும் இந்த எண்ணெய்யை சிறிதளவு எடுத்து வலி இருக்கும் பகுதியில் தேய்த்து 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெய்யை கொண்டு வலி இருக்கும் பக்கத்தில் தேய்த்து விடுவதால் அந்த இடத்தில் இருக்கும் வலி, வீக்கம் குறைந்து இரத்த ஓட்டமும் சீராக அமைகிறது.
இந்த ஆயுர்வேதிக் தைலத்தை ஒரு நாளுக்கு மூன்று முறை அதாவது காலை, மதியம், இரவு என்று மூன்று வேலைகளிலும் பயன்படுத்தலாம். வலி குறையும் வரையிலும் இந்த மருந்தை நீங்கள் பயன்படுத்தலாம்
No comments:
Post a Comment