Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுவாக நடைப்பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் தரும் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.
மற்ற உடற்பயிற்சிகளை போல் இன்றி, சோர்வடையாமல், அதிக கலோரிகளை எரிப்பதில் நடைப்பயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு. தினமும் அதிகாலை 30 நிமிடங்கள் தவறாமல், நடைப்பயிற்சி மேற்கொள்வதால் நமக்கு கிடைக்கும் 20 நன்மைகள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. இதயம் சம்பந்தப்பட்ட நோய்க்கான அபாயத்தை குறைக்கும்.
2. உடல் எடையை பராமரிக்க உதவும்
3. மன அழுத்தத்தை குறைக்க உதவும்
4. உங்களின் ஆற்றலை அதிகரிக்க உதவும்
5. நல்ல மனநிலையுடன் இருக்க உதவும்
6. ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
7. உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும்.
8. தேவையற்ற கவலைகளை குறைக்க உதவும்
9. நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்க உதவும்.
10. சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி உடலுக்கு கிடைக்க உதவும்.
11. புற்றுநோய் பாதிப்புக்கான வாய்ப்பை குறைக்கும்.
12. நல்ல ஆரோக்கியமான தூக்கத்தை தூண்டும்.
13. உங்களை நீங்கள் பராமரிக்க போதுமான நேரத்தை தரும்.
14. உடல் ஒத்துழைப்பு மற்றும் சமநிலையை மேம்படுத்த உதவும்.
15. வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும்.
16. நீரிழிவு நோய் வாய்ப்பை குறைக்கும்.
17. கிரியேட்டிவிட்டினை தூண்டிவிடும்.
18. எலும்புகள், தசைகளுக்கு வலிமை தரும்.
19. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவும்.
20. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
No comments:
Post a Comment