Join THAMIZHKADAL WhatsApp Groups
ரஷ்ய பல்கலைகளில், வரும் கல்வியாண்டில், 5,000 மருத்துவ இடங்கள் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.ரஷ்ய அறிவியல் மற்றும் கலாசார மையம், ரஷ்ய பல்கலைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனமான 'ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ்' சார்பில், வரும் 19ம் தேதி, கோவையில் ரஷ்ய கல்வி கண்காட்சி நடக்கிறது.இதுகுறித்து,
கசான் மாநில மருத்துவப் பல்கலை பொது நோயியல் துறை இணைப் பேராசிரியர் தைமூர் ருஸ்தமோவிச் அக்மதேவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ரஷ்யாவில், உயர் கல்விக்கான செலவு குறைவு.
ரஷ்ய கூட்டமைப்பு அரசுகளால் அதிக மானியம் வழங்கப்படுவதே இதற்கு காரணம். இந்தியாவின் தேசிய மருத்துவ கவுன்சிலின் மாறிவரும் விதிகள், வழிகாட்டுதல்களை ரஷ்ய பல்கலைகள் ஏற்கனவே கடைபிடித்து வருகின்றன. இதனால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா முதல் தேர்வாக உள்ளது.வர்த்தகம், அரசு உதவித்தொகை சார்ந்தும் ரஷ்யா விருப்பமான இடமாக மாறிவருகிறது.வரும் கல்வியாண்டில் ரஷ்ய பல்கலைகளில் இந்திய மாணவர்களுக்கு, 5,000 மருத்துவ இடங்கள் வழங்கப்பட உள்ளன. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள், ரஷ்ய மருத்துவ இளங்கலை, முதுகலை பட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
தமிழ்வழி மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பல்கலை, படிக்கும் நகரம் ஆகியவற்றைப் பொறுத்து, ஆங்கில வழிப் படிப்புகளுக்கான படிப்புக் கட்டணம் ஆண்டுக்கு 3,500 முதல் 6,000 அமெரிக்க டாலர் வரை ஆகும்.வெளிநாட்டு மாணவர்கள், 100 சதவீத இலவசக் கல்வியைப் பெற உதவித்தொகைத் திட்டத்தை ரஷ்ய அரசு வழங்குகிறது. தகுதிவாய்ந்த மாணவர்கள் உதவித்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.கோவையில் நடைபெறவுள்ள கல்விக் கண்காட்சியில் ரஷ்யாவின், பல பல்கலைகள் பங்கேற்கவுள்ளன. கண்காட்சி குறித்த விவரங்களை அறிய மாணவர்கள், 92822 21221 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ்பாபு உடனிருந்தார்.
No comments:
Post a Comment