Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 19, 2023

தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்க நடவடிக்கை விவரங்களை அனுப்ப உத்தரவு பள்ளிக் கல்வித்துறை

மே 19: பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், அதற்கான விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி), அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையில் அமைச்சுப்பணியில் தற்காலிக பணியிடங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர் நீட்டிப்பு ஆணை பெறப்பட்டு வருகிறது. தற்காலிக பணியிடங்கள் தொடர்வதன் அவசியத்தை ஆராயக் குழு அமைக்கப்பட்டது. 

தற்காலிக பணியிடங்களை நிரந்தரமாக்குதல் தொடர்பாக விவரங்கள் கோரப்பட்டுள்ளது. அதற்கான படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 1 முதல் 9 வரை உள்ள விவரங்களை படிவத்தில் தட்டச்சு செய்து அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

இந்த விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டியுள்ளதால், இதில் தனிகவனம் செலுத்தி உரிய காலக்கெடுவிற்குள் விவரங்களை படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News