Join THAMIZHKADAL WhatsApp Groups
கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா 10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதை ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.கௌதமன் கண்டித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லியிருப்பதாவது...
கடந்த 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மூன்று நாட்களில் 4 பகுதிநேர ஆசிரியர்கள் இறந்துள்ளனர். அதில் கரூரை சேர்ந்த பிரதாப் என்ற பகுதி நேர கணினி ஆசிரியர் சாலை ஓரத்தில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்த நிலையில் தாறுமாறாக கட்டுப்பாடு இழந்து வந்த ஒரு கார் மோதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி கோரமான முறையில் உயிரிழந்தார்.
2012 ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகளாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையில் மாதம் 10,000 என்ற குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு அரசு சார்பில் எந்த நிதி உதவியும் வழங்கப்படுவதில்லை. தற்காலிக ஊழியர்கள் என்பதால் அரசால் எங்களுக்கு எந்த காப்பீடு திட்டமும் வழங்கப்படுவதில்லை. அரசின் ஊழியர்கள்,குறைந்த ஊதியம் என்று கருணை அடிப்படையில் கூட எந்த நிதி உதவியும் வழங்குவதில்லை.
இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட,உடலுக்கும்,உயிருக்கும் ஆபத்து என்று தெரிந்தும் கள்ளச்சாராயத்தை தேடிச் சென்று குடித்து மரணமடைந்த மூன்று நபர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கியிருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.அரசுத்துறையில் பணியாற்றி மாணவர்களின் தனித்திறமையை உயர்த்திய உயிரிழந்த பகுதிநேர ஆசிரியர்களின் குடும்பங்களுக்கும் முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றோம்.
பழ.கௌதமன்
ஒருங்கிணைப்பாளர்
ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கம்.
அலைபேசி : 9943244855
No comments:
Post a Comment