Join THAMIZHKADAL WhatsApp Groups
லட்ச கணக்கான ரூபாய்களை கல்வி கட்டணமாக செலுத்தி படித்தால் தான் சிறந்த கல்வி, உடனடி வேலை கிடைக்கும் என்ற மாயை தற்போது நிலவி வருகின்றது. இது உண்மையில்லை, குறைந்த செலவில் படிக்கும் பல சிறந்த படிப்புகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.
அறிவியல் படிப்புகள் :
B.Sc ( physics) : இந்த படிப்பை அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். வெறும் B.Sc ( physics) மட்டும் படிக்காமல் M.Sc சேர்த்து படித்தால், இஸ்ரோ, DRDO போன்ற அரசு நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணியாற்றலாம். ஆராய்ச்சி துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. M.Sc படிக்க கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும்.
B.Sc ( Chemistry) : மருந்து மாத்திரைகள் தயாரிப்பு துறை, பிளாஸ்டிக் தயாரிப்பு துறை உட்பட பல துறைகளில் வேலை வாய்ப்புள்ள படிப்பு இது. வெறும் B.Sc(Chemistry) மட்டும் படிக்காமல், M.Sc படித்தால் எளிதில் வேலை கிடைக்கும். CSIR தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் ஆராய்ச்சி துறையில் நல்ல ஊதியத்துடன் பணியாற்ற முடியும்.
B.Sc (Mathematics) : புள்ளியியல் துறை(Statistics), தகவல் பகுப்பாய்வு (Data analytics) , செயற்க்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறைகளில் சிறந்த வேலை வாய்புகள் உள்ளன. வெறும் B.Sc மட்டும் படிக்காமல், M.Sc Mathematics, M.Sc Statistics படிப்புகள் படித்தால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்பு உடனே கிடைக்கும்.
IIT-ல் M.Sc (physics, Chemistry, Mathematics) படிப்பதற்கு JAM என்ற தேர்வும், சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் M.Sc (physics, Chemistry, Mathematics) படிக்க தனியாக நுழைவு தேர்வும் உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற்று M.Sc படிப்பை ஐஐடியிலோ அல்லது அண்ணா பல்கலை கழகத்திலோ படிதால் உள்நாட்டில் பொறியாளருக்கு (Engineer) நிகரான வேலை கிடைக்கும். வெளிநாட்டில் மாத மாதம் ஊக்க தொகை வாங்கி கொண்டு phd படிக்கலாம். phd முடித்ததும் உள்நாடு/வெளிநாட்டிலோ பேராசிரியராக பணியாற்றலாம்.
M.Sc (physics, Chemistry, Mathematics) முடித்தவர்கள் GATE மற்றும் TANCET தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று M.E/M.Tech படிக்கலாம். இதன் மூலம் தகவல் தொழில் நுட்ப துறை (IT) உட்பட பெரும்பாலான துறையில் பணியாற்றலாம்.வேலை வாய்ப்பை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (chemistry, mathematics) படிக்கலாம், ஆராய்ச்சியை இலக்காக கொண்ட மாணவர்கள் B.Sc (physics, chemistry) படிக்கலாம், கல்வி துறை (Teaching) , ஆராய்ச்சி துறை (Research) , தகவல் தொழில் நுட்பம் (IT) , உற்பத்தி துறை (Manufacturing) என பெரும்பாலான துறைகளில் வேலை வாய்ப்புள்ள சிறந்த படிப்புகள் இவை.
கலை படிப்புகள் :
B.A (Economics) : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.4 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகும். பொருளாதார துறையில் அதிக வேலைவாய்ப்புள்ள படிப்பு (வங்கி /வட்டி துறையை தவிர்க்கவும்). M.A (Economics) படிப்பதன் மூலம் விற்பனை துறை, பொருளாதார திட்டமிடல் துறை, வர்த்தக துறை போன்ற பல துறைகளில் வேலை வாய்ப்பை பெறலாம். M.A படிப்பதற்க்கு கல்லூரிக்கு ஏற்றார்போல் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை செலவாகும்.
B.A (English) : மொழிபெயற்பாளர் (Translator), கல்வி துறை (Teaching) போன்ற துறைகளில் அதிக வேலை வாய்புள்ள படிப்பு.
B.A (Journalism, Mass media) ஊடக துறைபடிப்புகள் : குறைந்த செலவில் படிக்கும் சமூககதிற்க்கு பயனளிக்கும் சிறந்த படிப்புகள் ஊடக துறைபடிப்புகள். மேற்கொண்டு M.A படித்து ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டால் நல்ல ஊடகத்தில் சிறந்த வேலை எளிதில் கிடைக்கும்.
B.Com : பொறியாளர், மருத்துவருக்கு இணையான துறையாக பார்க்கப்படுவது கணக்காளர் (Accountant) துறை. B.Com படித்து CA (charted accountant) , CMA ( cost management accounting) , ICS போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெறுவன் மூலம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்க முடியும். இப்படி பட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெறாவிட்டாலும் நல்ல சம்பளத்துடம் கூடிய அதிக வேலைவாய்ப்புகள் B.Com படிப்புகளுக்கு உள்ளன.
மேலாண்மை படிப்பு :
B.B.A : அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.5 ஆயிரமும், தனியார் கல்லூரியில் படித்தால் வருடத்திற்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகும். B.B.A படிப்போடு, ஜெர்மன், பிரன்சு, ஜாபனீஸ் மொழிகளில் ஏதேவது ஒன்று தெரிந்தால் விற்பனை துறையில் (sales, marketing) அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆங்கில மொழி திறனும், நல்ல தொடர்பு திறனும் (communication skill) இருந்தால் பொறியாளருக்கு இணையான சம்பளத்துடன் அதிக வேலைவாய்ப்புகள் உள்ள படிப்பு இது.
தகவல் தொழில் நுட்ப துறை (IT) :
மாதம் லட்ச கணக்கில் சம்பளத்தை அள்ளி தரும் துறை IT filed என சொல்லப்படும் தகவல் தொழில் நுட்ப துறை. B.C.A மற்றும் B.Sc (computer science) படித்து, Python, R, Go போன்ற கணிணி மொழியில் (programming language) ஆழ்ந்த அறிவு இருந்தால் Automation துறையில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. அரசு கல்லூரியில் படித்தால் வருடத்திற்க்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், தனியார் கல்லூரியில் வருடத்திற்க்கு ரூ.20 ஆயிரம் வரையிலும் செலவாகும். கூடுதலாக MCA அல்லது M.Sc (IT) படித்தால் பொறியாளருக்கும் இணையான ஊதியம் பெற முடியும்.
தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாய்ப்பை பெற மிக முக்கியமானது ஆங்கில பேச்சாற்றல், தொடர்பு திறன் மற்றும் ஏதாவது ஒரு கணிணி மொழியில் ஆழந்த அறிவு இருக்க வேண்டும். MCA, M.Sc (IT) படிக்க கல்லூரிக்க ஏற்றவாரு வருடத்திற்க்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகும்.
குறைந்த செலவில் பொறியியல் (Engineering) , மருத்துவம் (MBBS) படிக்க :
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரியில் பொறியியல் (B.E) படிக்க வருடத்திற்க்கு ஆகும் செலவு ரூ.20 ஆயிரம் தான். இதற்க்கு +2 ல் 195 -க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண் எடுக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் MBBS படிக்க வருடத்திற்க்கான கல்வி கட்டணம் ரூ.25 ஆயிரம் தான். இதற்க்கு NEET தேர்வில் குறைந்தது 430 மார்க் எடுக்க வேண்டும் (அதாவது மொத்தம் 720 மதிப்பெணிற்க்கு 430 மதிப்பெண் எடுக்க வேண்டும்).
படிப்பிற்க்கு மிக அதிக பணம் செலவாகும் என்பது நமது அறியாமைதான், நமது அறியாமையைதான் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்தி லட்ச கணக்கில் கல்வி கட்டணம் என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றன. மாணவர்களை நன்றாக படிக்க வைத்தால் எந்த படிப்பிற்க்கும் சில ஆயிரங்கள் தான் செலவாகும்.
எனவே பெற்றோர்களே! மாணவர்களே!, கடன் வாங்கி, வட்டிக்கு வாங்கி, சொத்தை விற்று லட்ச கணக்கில் கல்வி கட்டணம் கட்டி படிப்பதை விட குடும்பத்தின் பொருளாதார சூழலுக்கு ஏற்றார்போல் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கவும்.
No comments:
Post a Comment