Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 6, 2023

சப்பாத்தி சுட்டு அதை மறுநாள் சாப்பிட்டால் இத்தனை நன்மைகள் கிடைக்குதா..?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

பழைய சாதம் எப்படி நமக்கு மிகுந்த அரோக்கியம் தரும் ஒரு உணவாக உள்ளதோ, அது போல வேறு சில உணவுகளும் உள்ளன.

அத்தகைய ஒரு உணவு தான் சப்பாத்தி. நேற்று செய்து மீதமுள்ள சப்பாத்தியை காலையில் பால் ஊற்றி அல்லது அபப்டியே கூட நாம் சாப்பிடுவோம். ஆனால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது என்று உங்களுக்குத் தெரியுமா?

ஆம், மீதமுள்ள ரொட்டி நீரிழிவு நோய் மற்றும் செரிமானத்திற்கு நன்மைகள் விளைவிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த சப்பாத்தியை இரவில் ஃப்ரீஸ் செய்வது ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச்சை அதிகரிக்கிறது. இது இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. காலை உணவில் பால் அல்லது காய்கறிகளுடன் மீதமுள்ள ரொட்டியை சேர்த்து சாப்பிடுவது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சிறந்த முடிவுகளைப் பெற சப்பாத்தியை செய்து 12-15 மணி நேரத்திற்குள் ஃப்ரீஸ் செய்து அதனை சாப்பிடுவது நல்லது.


பிரெஷ் ஆன சப்பாத்தியை விட நேற்று செய்த சப்பாத்தி ஆரோக்கியமானதா?

சப்பாத்தியை மீண்டும் மீண்டும் சமைத்து ஃப்ரீஸ் செய்வது ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச்சை அதிகரிக்கிறது. இது ஆரோக்கியம் பயக்கும் குடல் மைக்ரோ பயோட்டாவை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச் அதிகம் உள்ள தானியங்கள் மனித ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளன.

மீதமுள்ள சப்பாத்தியை எப்படி சாப்பிட வேண்டும்?

நேற்று சுட்டு மீதமுள்ள சப்பாத்தி இந்திய உணவில் பெரும் பங்கு வகிக்கிறது என்றும் சொல்லலாம். இது மக்கள் பொதுவாக காலை உணவாக விரும்பி சாப்பிடுகிறார்கள். சரியான முறையில் உட்கொண்டால், அது உங்கள் உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கும். சப்பாத்தியில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளதால், காய்கறிகள் மற்றும் புரத உணவுகளுடன் இதனை சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

அதே சமயம், நீங்கள் எத்தனை சப்பாத்தி சாப்பிடுகிறீர்கள் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்வதும் முக்கியம். ஏன் என்றால், கோதுமையில் உள்ள அதிக அளவு க்ளுட்டன் ஆனது எரிச்சலூட்டும் குடல் நோயை மோசமாக்கி செரிமான மண்டலத்தில் அழற்சியை ஏற்படுத்தி விடும்.

கவனத்தில் கொள்ள வேண்டிய பிற விஷயங்கள் :

12 மணி நேரம் ஃப்ரீஸ் செய்தால், சப்பாத்தியின் சுவை, அமைப்பு மற்றும் ஸ்டார்ச் கலவையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இது ரெஸிஸ்டண்ட் ஸ்டார்ச் உருவாவதற்கு வழிவகுக்கிறது. இது நார்ச்சத்து போல் செயல்படும் மற்றும் எளிதில் குளுக்கோஸாக உடையாது. இருப்பினும், பிரஷ் ஆன மற்றும் நேற்று சுட்டு மீதமுள்ள சப்பாத்திக்கு இடையிலான கிளைசெமிக் குறியீட்டில் உள்ள வேறுபாடு இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டை கணிசமாக பாதிக்காது. சரியாக ஸ்டோர் செய்யப்படாவிட்டால், பாக்டீரியா அல்லது பூஞ்சை அதில் வளரலாம். அதனால் பார்த்து பக்குவமாக ஸ்டோர் செய்து சாப்பிட வேண்டும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News