Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 4, 2023

பி.இ., பி.டெக்., படிப்பு: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு நாளைமுதல் (மே 5) ஜூன் 9ஆம் தேதி வரை இணைய வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

அரசு, அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு கல்லூரிகளில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

www.tneaonline.org, www.tndte.gov.in ஆகிய இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படுள்ள பொயியியல் சேர்க்கை சேவை மையத்திலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் பொயியியல் கல்லூரிகளில் சேர மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 8ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே நாளைமுதல் (மே 5) பொயியியல் படிப்புகளில் சேர மாணவர்கள்விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News