Join THAMIZHKADAL WhatsApp Groups
வாயுத்தொல்லை, செரிமானமின்மை, வயிற்றுப் பொருமல், பசியின்மை, அஜீரணத்துக்குப் பஞ்ச தீபாக்கினி சூரணம் வேளைக்கு ஒன்று அல்லது இரண்டு ஆகாரத்துக்கு முன்போ பின்போ எடுத்துக்கொள்ளலாம்.
இருமல் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. சளி இருந்தால், பெரும்பாலும் இருமலும் கூடவே சேர்ந்து வந்து விடும். இருமலுக்கு பஞ்ச தீபாக்கினி சூரணம் ஒரு சிறந்த மருந்தாக இருக்கும்.
இன்றைய காலகட்டத்தின் உணவுமுறை மாற்றம், தரமற்ற உணவுகள், மன அழுத்தம் போன்ற பல்வேறு காரனங்களால் பென்களின் மாதவிடாய் சுலற்ச்சியில் மாற்றம் ஏற்ப்பட்டு நூற்றுக்கு எம்பது சதவிகிதம் தாய்மார்களும், சகோதிரிகளும் இது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட எளிய முறையில் சூரணம் ஒன்றை தயாரிக்கலாம்.
பஞ்ச சீரக சூரணம்:
தேவையான பொருட்கள்:-
1. சீரகம் - 50 கிராம்
2. பிளப்புச்சீரகம்- 50 கிராம்
3. சோம்பு - 50 கிராம்
4. கருஞ்சீரகம் - 50 கிராம்
5. காட்டுச்சீரகம் - 50 கிராம்
இவை ஐந்தையும் சுத்தம் செய்து பின்வரும் சான்றுகளில் ஊற வைக்கவும்.
*இஞ்சிச் சாறு
*எலுமிச்சைச் சாறு
*பூண்டு சாறு
*புதினாச் சாறு
*மல்லிச் சாறு
இவற்றில் ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து, சம அளவு சர்க்கரையை தூள் செய்து இத்துடன் கலந்துகொள்ளவும்.
இதனை தினசரி அதிகாலை மற்றும் மாலையில் ஒரு தேக்கரண்டி வீதம் தொடர்ந்து சாப்பிட்டுவர மாதவிடாய் கோளாறுகள் தீரும். உடல் பருமன், தொப்பை, அதிக கொழுப்பு தீரும்.
சிறுவர்களுக்கு அரை தேக்கரண்டி பஞ்ச தீபாக்கினி சூரணத்தைத் தேனில் குழப்பி உணவுக்கு முன் காலை மட்டும் இரண்டு நாட்கள் கொடுத்து வர பரிபூரண குணமாகும்.
பச்சிளம் குழந்தைகளுக்கு இந்த பஞ்ச தீபாக்கினி சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு தேனில் குழைத்து நாக்கில் தடவ நோய் சரியாகும். அகத்தியர் வைத்திய ரத்தின சுருக்கத்தில் இந்த சூரணம் பன்னிரெண்டு நோய்களைத் தீர்க்கும் என குறிப்பிடப் பட்டுள்ளது. இது ஒரு சரியாக எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்.
No comments:
Post a Comment