Join THAMIZHKADAL WhatsApp Groups
மே 18:மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய போட்டித்தேர்வுக்கு, ''நான் முதல்வன்'' திட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என, மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளது.
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இரயில்வே தேர்வு வாரியம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத்துறை வாயிலாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 25.05.2023 முதல் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் மற்றும் இப்போட்டித்தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்கள் தங்களுடைய விவரங்களை https://candidate.tnskill.tn.gov.in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே பயிற்சி வகுப்பில் சேர அனுமதி வழங்கப்படும். பதிவு செய்வதற்கான கடைசி தேதி 20.05.2023 ஆகும். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் செங்கல்பட்டு மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment