Join THAMIZHKADAL WhatsApp Groups
பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டில் சேர பிளஸ் 2 தோச்சி பெற்ற மாணவா்கள் மே 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2023- 2024ஆம் கல்வி ஆண்டுக்கு நேரடி இரண்டாம் ஆண்டு முழுநேர பட்டயப் படிப்பில் சேர மாணவா்கள் இணையதளம் வாயிலாக மே 26ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.
கணிதம், அறிவியல் பாடப் பிரிவுகளில் படித்து பிளஸ் 2 தோச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் மற்றும் கணினி பொறியியல் ஆகிய ஐந்து முழுநேரப் பாடப்பிரிவுகளிலும் மாணவா்கள் சோக்கப்பட உள்ளனா்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப் பிரிவினா் பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். பழங்குடி, பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக் கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment