Join THAMIZHKADAL WhatsApp Groups
நம்முடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால், இந்த வெற்றிலையோடு, நன்னாரிவேர் 2 துண்டு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், பச்சை கற்பூரம் ஒரு சிறிய துண்டு, ஜவ்வாது தூள் ஒரு சிட்டிகை, இவை அனைத்தையும் சேர்க்கப் போகின்றோம்.
உங்கள் வீட்டில் பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்துக் கொள்ளவேண்டும். சுத்தமான நீரை ஊற்றி அதில் மேற்குறிப்பிட்ட பொருட்களை எல்லாம் போட்டு விடவேண்டும். நறுமணம் மிக்க இந்த தண்ணீருக்குள், வெற்றிலைக்காம்பு மேல் பக்கத்தில் இருக்கும் படி, வெற்றிலை ஒன்றை தண்ணீரில் மூழ்க வைத்து விடுங்கள்.
இதை எப்போது செய்யவேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்றால், வெள்ளிக்கிழமை காலை மகாலட்சுமி பூஜை செய்யும்போது இந்த சொம்பை தயார் செய்து, மகாலட்சுமி தாயாரின் முன்பு வைத்து, பூஜை செய்ய வேண்டும். மாலை, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த சொம்பில் இருக்கும் தீர்த்தத்தை எடுத்து, அந்த வெற்றிலையினால் உங்கள் வீட்டு மூலை முடுக்குகளில் தெளித்து விட வேண்டும்.
சமையலறை, படுக்கையறை, வரவேற்பறை இப்படி உங்கள் வீட்டில் எவ்வளவு அறைகள் இருக்கின்றதோ, அந்த அறைகள் முழுவதிலும் இந்த தண்ணீர் படும் அளவிற்கு தெளித்து விட்டீர்கள் என்றால், மூதேவி உங்கள் வீட்டில் வாசம் செய்யவே மாட்டாள். நறுமணமிக்க இந்த தீர்த்தமானது வீட்டில் சந்தோஷத்தை நிலையாக வைத்திருக்கும். பணக்கஷ்டம் ஏற்படாது. மனக்கஷ்டம் ஏற்படாது. சண்டை சச்சரவு ஏற்படாது. நோய் நொடிகள் இல்லாத வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு இது ஒரு சிறந்த முறை. தோல்வியே வராது என்பது ஐதீகம்.
வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதி தேவியும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. வெற்றிலையோடு, பாக்கும் சேர்வது மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அம்சமாகும். எல்லா செடியும் துளிர்த்து இலையாகி, மொட்டாகி, பூத்து, காய்த்து கனியாகும். அந்த செடிக்கேற்ப இலை, காய், கனின்னு அடுத்தவங்க பசியாற பயன்படும். ஆனால், வெற்றிலை கொடியில் மட்டும் இலை மட்டுமே உருவாகும். பூவோ, காயோ, கனியோ உண்டாகாது.
கடவுளுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும், வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் நிறைவுபெறுவதில்லை. சிறப்பு வாய்ந்த வெற்றியிலையில் தீபம் எப்படி ஏற்றி வழிபட வெற்றிகள் தேடி வரும். முதலில் சேதாரம் இல்லாத, நுனிப்பகுதி உள்ள 6 வெற்றிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். 6 வெற்றிலைகளையும் மயில் தோகை போல் விரித்து, வைத்து விடவேண்டும். அதன்மேல் ஒரு அகல் விளக்கை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரிபோட்டு வைக்கவும். அதன்பின், கிழித்து வைத்த 6 வெற்றிலை காம்புகளையும் நல்லெண்ணெய்குள் போட்டுவிட்டு, தீபத்தை ஏற்றவும்.
தீபத்தில் எண்ணெய் சூடாகி வெற்றிலை காம்பில் இருந்து லேசான நறுமணம் வீசும். தீபத்திற்கு அடியில் இருக்கும் காம்பு இல்லாத வெற்றிலையில் இருந்தும் நல்ல நறுமணம் வீசும். இந்த நறுமணத்தை நன்றாக சுவாசம் செய்து தீபத்தை நோக்கியவாறு, உங்கள் குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதில் நினைத்துக்கொண்டு, ஐந்து நிமிடங்கள் உங்கள் மனதில் நினைத்திருக்கும் கோரிக்கையை வைத்து பிரார்த்தனை செய்தால் போதும். உங்களுக்கு இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சனையாக இருந்தாலும், அது விரைவாக தீர்ந்துவிடும்.
No comments:
Post a Comment