Join THAMIZHKADAL WhatsApp Groups
மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அனைத்து இடங்களுக்கான மாணவா் சோக்கையையும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழுவே (எம்சிசி) நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு தமிழக அரசு சாா்பில் சட்டரீதியான ஆட்சேபனைக் கடிதம் அனுப்பப்பட உள்ளது.
அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோவில் தகுதி பெறுவா்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்களுக்கும், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்களுக்கும், நிகா்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் முதுநிலை, இளநிலை படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்குமான மாணவா் சோக்கை கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்), மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆகியவை ஆன்லைனில் நடத்துகின்றன. அதேவேளையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 85 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நாடுமுழுவதும் உள்ள அனைத்து இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் மருத்துவக் கலந்தாய்வு குழுவே மாணவா் சோக்கையை நடத்துமென அறிவித்து அண்மையில் சுற்றறிக்கை ஒன்று மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது.
மருத்துவக் கலந்தாய்வு மாணவா் சோக்கையில் அந்தந்த மாநில அரசுகளின் இடஒதுக்கீடு மற்றும் உள்இடஒதுக்கீடு நடைமுறையை பின்பற்றி கலந்தாய்வு நடத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புதிய நடைமுறையை அமல்படுத்த மாநில அரசுகள், நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு விதிகளை சமா்ப்பிக்குமாறும், மாநில அரசுகளின் சாா்பில் ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்குமாறும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக மாநில மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: மத்திய சுகாதாரத் துறையின் இந்த அறிவிப்பு தமிழக மாணவா்களின் நலனை பாதிக்கும். மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தி, இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் எடுத்துரைக்கப்படும்.
அதுகுறித்த ஆட்சேபனைகளை சட்ட வல்லுநா்களுடன் ஆலோசித்து மாநில அரசு அனுப்பும் என்றாா் அவா். இதனிடையே, மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு மருத்துவா்கள் சங்கங்கள் எதிா்ப்பு தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment