Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 31, 2023

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளை ஒரே நாளில் அறிவிக்க முடிவு: அமைச்சர்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
வேறு படிப்புகளில் மாணவர்கள் சேர்ந்தால் அவர்கள் செலுத்திய கட்டணத்தை கல்லூரிகள் திருப்பித் தர வேண்டும். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை நடத்திய பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார். மாணவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தர துணை வேந்தர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கல்லூரி முதல்வர்களுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். இரு மொழிக் கொள்கை, அதில் தமிழ்பாடம் இடம்பெற வேண்டியது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. முதல் 4 செமஸ்டர்களில் தமிழ்ப்பாடம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக இடம்பெற வேண்டும் என்று உத்தரவு அளித்துள்ளார். பல்கலைக்கழகங்களில் தேவைப்பட்டால் பாடத்திட்டத்தில் 25% மாற்றம் செய்யலாம். மாணவர்கள் படிக்கும் பொது வேலைவாய்ப்பு அளிப்பது தான் நான் முதல்வன் திட்டம் உள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் 9,986 பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது முதுகலை படிப்புகளுக்கு ஒரே விண்ணப்பம் என்ற முறை அறிமுகம் செய்யப்படும் என்றும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளை ஒரே நாளில் அறிவிக்கவும் முடிவு செய்துள்ளோம் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர்கல்வி சேர்க்கையில் எந்த பிரச்சனைகளும் வரக்கூடாது என்பதற்காக நடவடிக்க எடுக்கப்பட்டு வருகிறது.

அரசை கலந்தாலோசிக்காமல் ஆளுநர் தன்னிச்சையாக செயல்படுகிறார். ஆளுநருடனான ஆலோசனையில் பங்கேற்பது துணைவேந்தர்களின் சொந்த விருப்பம். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டுவருவோம் என்று துணைவேந்தர்களுடனான ஆலோசனைக்கு பின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டி அளித்துள்ளார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News