Join THAMIZHKADAL WhatsApp Groups
வெயில் காலம் வந்துவிட்டாலே உடல் சூடு, நீர்க்கடுப்பு, ஆற்றல் இழப்பு, வியர்வை என பல பிரச்சனைகளை எதிர்கொள்வோம்.
அந்தவகையில், உங்கள் வீட்டில் இருப்பவர்களை புத்துணர்ச்சியாகவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் ஒரு குளிர்பானம் பற்றி கூறுகிறோம்.
இதை வெறும் 5 நிமிடங்களில் செய்து விடலாம். இதை வீட்டிலேயே எளிமையான செய்யலாம் என இந்த தொகுப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள் :
இஞ்சி சிரப் செய்ய..
இஞ்சி - 300 கிராம்.
தண்ணீர் - 5 கப்.
சர்க்கரை - 2 கப்.
இஞ்சி சர்பத் செய்ய.
இஞ்சி சிரப்
எலுமிச்சை பழச்சாறு - 1 பழம்.
எலுமிச்சைபழ துண்டுகள் - 2.
புதினா இலை - சிறிது.
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.
சோடா - தேவையான அளவு.
செய்முறை :
முதலில், இஞ்சியை சுத்தம் செய்து தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
நறுக்கிய இஞ்சியை ஒரு பாத்திரத்தில் தட்டி போட்டு, தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
தண்ணீர் நன்கு கொதித்தவுடன் அதை தனியே வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இப்போது, வடிக்கட்டிய சாறை பாத்திரத்தில் ஊற்றி, சர்க்கரை சேர்த்து மீண்டும் கொதிக்கவிடவும்.
இஞ்சி சாறு சிறிது கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
கொதித்த இஞ்சி சிரப்'பை ஆறவிட்டு, கிளாஸ் பாட்டில்'லில் ஊற்றி பிரிட்ஜ்'ஜில் வைத்து பயன்படுத்தவும்.
இஞ்சி ஷர்பத் செய்ய, இஞ்சி சிரப்'பை ஊற்றி ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, அதில் எலுமிச்சை சாறை சேர்க்கவும்.
இதை தொடர்ந்து, இதில் புதினா இலை, எலுமிச்சைபழ துண்டுகள், ஐஸ் கட்டிகள் போடவும். இறுதியாக சோடா ஊற்றி, நன்கு கலக்க சுவையான இஞ்சி சர்பத் தயார்.
No comments:
Post a Comment