Join THAMIZHKADAL WhatsApp Groups
ஓம விதையில் பல நன்மைகள் உள்ளன. இது வயிற்றுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. வாயுப் பிரச்சனை, அஜீரணக் கோளாறு, வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்ய ஓமம் தண்ணீரை குடிக்கலாம்.
ஓமம் ஆயுர்வேத பண்புகள் நிறைந்தது. ஓம விதை தண்ணீரை குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன. Web MD படி, ஓமம் உட்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற முடியும். அப்படி ஓம விதை கொதிக்க வைத்தோ அல்லது இரவு ஊற வைத்து மறுநாள் காலையோ அந்த தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
உடல் பருமனை குறைக்கும் :
உடலில் கொழுப்பு அதிகரிப்பதால், உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் தொப்பையும் உருவாகிறது. இதற்கு ஓம விதை நீர் பலன் தருகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் ஓம விதை நீரை குடித்து வந்தால், தொப்பை குறையும்.
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்கும் :
ஓம விதையில் ஹைப்பர்லிபிடெமிக் எதிர்ப்பு பண்பு காணப்படுகிறது. அஜ்வைன் தண்ணீரைக் குடிப்பதால், உடலின் கொலஸ்ட்ரால், எல்டிஎல்-கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடுகள் மற்றும் மொத்த கொழுப்புச் சத்துக்களைக் குறைக்கலாம். கொலஸ்ட்ரால் குறைவதால் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. அதோடு கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் இருக்கும்.
செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கும் :
தினமும் அஜ்வைன் தண்ணீரைக் குடிப்பதால், செரிமான அமைப்பு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். இதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவுகிறது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான நொறுக்குத் தீனிகளை உட்கொள்வதால், உண்டாகும் வயிற்றில் வாயு பிரச்சனையை சரி செய்ய இந்த தண்ணீரை குடிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு :
ஓம விதை தண்ணீர் குடிப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. அதோடு பல வகையான நோய்கள் மற்றும் தொற்று நோய்களையும் தவிர்க்கலாம்.
மாதவிடாய் வலிக்கு நிவாரணம் :
அஜ்வைன் தண்ணீர் மாதவிடாய் வலியிலிருந்தும் நிவாரணம் தருகிறது. மாதவிடாய் காலத்தில் வயிற்று வலி உள்ள பெண்கள் ஓம விதை நீர் பருகலாம். அஜ்வைன் தண்ணீரைக் குடிப்பதால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கலாம்.
No comments:
Post a Comment