Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் நாளை வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளதால் தமிழக முழுவதும் நாளை கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
அதனைப் போலவே சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வெள்ளிக்கிழமை செயல்படாது. மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு தமிழகத்தில் கடைகள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லறை வணிக நிறுவனங்கள், தினசரி சந்தைகள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளித்து தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வணிகர்கள் லட்சக்கணக்கில் குடும்பத்துடன் கலந்து கொள்வார்கள் என அகில இந்திய வணிகர் சமையலத்தின் தேசிய தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வணிகர் தினத்தை முன்னிட்டு மே ஐந்தாம் தேதி ஈரோட்டில் வணிகர் தின மாநாடு நடைபெற உள்ளதால் மாநாட்டுக்கு வியாபாரிகள் அனைவரும் செல்ல இருப்பதால் நாளை சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை முழுவதும் அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment