Join THAMIZHKADAL WhatsApp Groups
''கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில், முதல் கட்டமாக, ரேஷன் கடை வாயிலாக தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
தமிழக நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில், உணவுப் பொருட்கள் இருப்பு மற்றும் ரேஷன் கடைகளுக்கு வினியோகிப்பது தொடர்பாக, மாநில அளவிலான ஆய்வு கூட்டம் நேற்று கோவையில் நடந்தது.தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியதாவது:
விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்.
'நெட் பேங்கிங்' மூலம் 45 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால், வீடு தேடி ரேஷன் கார்டு வரும். ரேஷன் கார்டு தொலைந்தாலும், இதே முறையில் நகல் அட்டை பெறலாம்.'பயோமெட்ரிக்' மற்றும் கண் கருவிழி ஸ்கேன் செய்து, பொருள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும். இம்மாதத்துக்குள் அனைத்து கடைகளிலும், பணப் பரிவர்த்தனை இன்றி, க்யூ.ஆர்., குறியீடை ஸ்கேன் செய்து, பொருட்கள் வாங்கலாம்.
தமிழகத்துக்கு, மாதம் ஒன்றுக்கு, 23 ஆயிரம் டன் கோதுமை தேவை.இதை, 8,000 டன்னாக மத்திய அரசு குறைத்து விட்டது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள், டில்லி சென்று கேட்கஉள்ளனர்.
முதற்கட்டமாக கோவை, நீலகிரி,கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில், ரேஷன் கடைகள்வாயிலாக தேங்காய் எண்ணெய் வழங்கதிட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment