Join THAMIZHKADAL WhatsApp Groups
நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் வெங்காயத்திற்கு நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது என்றாலும் இந்த வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கப் போகும் அற்புதங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க பச்சை வெங்காயம் உதவுகிறது. இதனால் வலுவான பற்கள் மற்றும் எலும்புகள் நமக்கு ஏற்படுகிறது.
டைப் 2 சர்க்கரை நோயின் அளவை குறைக்க இந்த பச்சை வெங்காயம் உதவுகிறது. இது இன்சுலின் உணர் திறனை அதிகரிப்பதால் ரத்த சர்க்கரை அளவை சரியாக கொண்டு செல்ல உதவுகிறது.
இதில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட அவற்றின் அபாயத்தை குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய வைட்டமின் சி பச்சை வெங்காயத்தில் இருக்கிறது. இதனால் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிடும் போது காய்ச்சல் மற்றும் சளி போன்ற சுவாச நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
No comments:
Post a Comment