Join THAMIZHKADAL WhatsApp Groups
உங்களுக்கு தீராத இடுப்பு வலி இருக்கும்.
இந்த இடுப்பு வலியால் எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாமல் கஷ்டப்படுவீர்கள். அந்த இடுப்பு வலியை எவ்வாறு குறைப்பது என்று இந்த பதிவில் காணலாம்.
இந்த பதிவில் கூறப்படும் மருத்துவத்தை செய்தால் இடுப்பு வலி மட்டுமில்லாமல் குறுக்கு வலி, முதுகு வலி கூட குணமடைந்துவிடும்.
இந்த மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்.
* லட்சகட்டை கீரை
* வெண்டைக்காய்
* தக்காளி
* மிளகு
* மஞ்சள் தூள்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை.
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள லட்சகட்டை கீரையை சிறிது சிறிதாக கிழித்து அதில் போட்டுக் கொள்ளவும்.
பிறகு இதில் வெண்டக்காயை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பிறகு தக்காளியை இரண்டாக அறுத்து அதில் அரை தக்காளியை மட்டும் இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் எடுத்து வைத்துள்ள மிளகில் 10லிருந்து 15 மிளகு சேர்த்துக் கொள்ளவும். இது கொதிக்க தொடங்கும் பொழுது இதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனுடன் உப்பு தேவையான அளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதாவது இதில் சேர்த்திருக்கும் வெண்டைக்காய், கீரை, மிளகு, தக்காளி ஆகியவற்றின் சத்துக்கள் இந்த நீரில் இறங்கும் வரை நன்கு கொத்திக்க வைக்க வேண்டும். பிறகு இதை வடிகட்டி அப்படியே குடிக்கலாம்.
இதை தொடர்ந்து தயார் செய்து குடிக்கும் பொழுது இடுப்பு வலி, குறுக்கு வலி, முதுகு வலி எதுவுமே இருக்காது.
No comments:
Post a Comment