Join THAMIZHKADAL WhatsApp Groups
நம்மில் பல பேருக்கு நாள்பட்ட தலைவலி, ஒற்றைத் தலைவலி ஆகியவை இருக்கும்.
நாம் என்னதான் மருந்து மாத்திரைகள் எடுத்தும் தலைவலி குணமாகாமல் இருந்திருக்கும். இந்த பதிவில் சொல்லப்படும் மருந்தை தயார் செய்து பயன்படுத்துவதால் தலைவலி என்பது நமக்கு இருக்காது.
தலைவலிக்கான மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்.
* கற்பூரவல்லி சாறு
* நல்லெண்ணெய்
* சர்க்கரை
செய்முறை
முதலில் கற்பூரவல்லி இலைகளை எடுத்து நன்றாக சுத்தம் செய்து இந்த இலைகளை இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இந்த கற்பூரவல்லி இலை சாறுடன் நல்லெண்ணெய் மற்றும் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதை நன்றாக கலக்கிக் கொள்ளவும்.
நன்றாக கலக்கிக் கொண்ட பிறகு இந்த மருந்தை நெற்றியில் பற்றுப் போட வேண்டும். பற்று போட்டால் தலைவலி குறையத் தொடங்கும். தலைவலி இருக்கும் பொழுது இந்த மருந்தை தயார் செய்து பற்றுப் போட்டுக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment