Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 4, 2023

அரசு கலை கல்லூரிகளில் 'அட்மிஷன்' சிக்கல் ஏன்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பான 'ஆன்லைன்' தளம் வடிவமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம், 170 அரசு கலை அறிவியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.

அவற்றில் இளநிலை படிப்பில், 1.08 லட்சம் பேர்; முதுநிலை படிப்பில் 19 ஆயிரம் பேர் உள்பட, 1.30 லட்சம் பேர் படிக்கின்றனர்.இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' வழியில், விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படும். பின், மாணவர்களின் தரவரிசை அடிப்படையில், அந்தந்த கல்லுாரிகளில் கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுவர்.இந்த ஆண்டு, மே மாதத்திலேயே விண்ணப்பபதிவை துவங்கவும், ஜூனில் மாணவர் சேர்க்கை நடத்தவும், உயர் கல்வித் துறை திட்டமிட்டிருந்தது.

ஆனால், மாணவர்களின் விண்ணப்ப பதிவுக்கான, www.tngasa.org என்ற இணையதள முகவரிக்கான உரிமத்தை, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உரிய நேரத்தில் புதுப்பிக்க தவறியதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. 

எனவே, ஆன்லைன் விண்ணப்ப பதிவை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.வரும் 8ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் நிலையில், தற்போதே பல தனியார் கலை அறிவியல் கல்லுாரிகள் விண்ணப்ப பதிவை துவங்கி, மாணவர் சேர்க்கை ஆயத்த பணிகளை துவங்கியுள்ளன.

ஆனால், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், விண்ணப்ப பதிவு கூட இன்னும் துவங்காததால், மாற்று ஏற்பாடாக, தனியார் கல்லுாரிகளுக்கு கட்டணம் செலுத்தி, மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News