Join THAMIZHKADAL WhatsApp Groups
தற்போது இதய நோய் மற்றும் பக்கவாதத்தால் நிறைய பேர் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்குவது உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் இருப்பது தான்.
கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் உள்ள மெழுகு போன்ற பிசுபிசுப்பான பொருள்.
கொலஸ்ட்ராலில் நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL) என இரண்டு வகைககள் உள்ளன. இதில் நல்ல கொலஸ்ட்ரால் உடலுக்கு பலவிதமான நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் கெட்ட கொலஸ்ட்ராலானது இரத்தக்குழாய்களின் சுவர்களில் படித்து, பலவிதமான இதய நோயை உண்டாக்குவதோடு, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
கெட்ட கொலஸ்ட்ராலானது உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் நாம் உண்ணும் ஒருசில உணவுகளின் மூலமாக உடலினுள் அதிகரிக்கின்றன. உணவுகளால் அதிகரித்த கெட்ட கொலஸ்ட்ராலை ஒருசில உணவுகளின் மூலமே குறைக்க முடியும்.
அதுவும் சில ஒருசில உணவுகளை ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும் போது, அது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இப்போது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும் சில உணவுச் சேர்க்கைகளைக் காண்போம்.
தால் மற்றும் கைக்குத்தல் அரிசி சாதம்
இந்திய உணவுகளில் தால் மிகவும் முக்கியமான உணவு. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் இது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. மறுபுறம் கைக்குத்தல் அரிசி சாதம் ஒரு முழு தானிய வகையைச் சேர்ந்தது. இதிலும் ஏராளமான அளவில் நார்ச்சத்து இருப்பதோடு, இதய நோயின் அபாயத்தை 20% குறைக்க உதவுகிறது.
மஞ்சள் மற்றும் மிளகு
பல நூற்றாண்டுகளாக மஞ்சள் சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள் அதிகமாக உள்ளன. ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் மற்றும் மெட்டபாலிசத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் சப்ளிமெண்ட்டை தொடர்ந்து 12 வாரங்கள் எடுத்து வந்ததில் உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்களின் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கணிசமாக குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது. எனவே உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் மிளகுத் தூளுடன், மஞ்சள் தூள் சேர்த்து உட்கொள்ள நல்ல மாற்றத்தைக் காணலாம்.
பாதாம் மற்றும் தயிர்
பாதாமில் இதயத்திற்கு நன்மை விளைவிக்கும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் வளமான அளவில் நிறைந்துள்ளன மற்றும் இத உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. ரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், தயிரை உட்கொள்வது மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 4 சதவீதத்தைக் குறைப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தயிரில் புரோபயோடிக்குகள் உள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, அழற்சியைக் குறைக்க உதவுகின்றன.
க்ரீன் மற்றும் எலுமிச்சை
க்ரீன் டீ உலகளவில் மிகவும் பிரபலமான பானம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. அதேப் போல் எலுமிச்சையில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இதுவும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் திறன் கொண்டவை. எனவே இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளும் போது, அது உடலினுள் மாயங்களை புரியும். ஆகவே நீங்கள் தினமும் க்ரீன் டீ குடித்து வந்தால், அதில் சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து குடியுங்கள்.
பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு, வெங்காயம் ஆகிய இரண்டுமே தினசரி உணவில் சேர்த்து வரும் மிகவும் முக்கியமான உணவுப் பொருட்களாகும். இவ்விரு பொருட்களிலுமே கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள் உள்ளன. அதில் பூண்டில் உள்ள அல்லிசின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. அதேப் போல் வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் கெட்ட கொலஸ்ட்ராலைத் தடுக்க உதவுகிறது. எனவே உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், தினசரி உணவில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வருவது நல்லது.
No comments:
Post a Comment