பொதுவாக இளநரை பிரச்சினை அதிக மன அழுத்தம் காரணமாக உருவாகிறது .இந்த இளநரையை தீர்க்க பலர் டை அடித்து நிறைய பக்க விளைவுகளை சந்தித்திருப்பர் .ஆனால் பக்க விளைவு இல்லாமல் ஒரு சில வீட்டு வைத்தியம் மூலம் இதற்கு தீர்வு காணலாம் ,இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் வெந்தயத்தை போட்டு நன்கு கலக்கவும்.
2.பிறகு, அந்த வெந்தய நீரை கொதிக்க வைத்து ஆற வைக்கவும் .
3.பின்னர் அந்த வெந்தய நீர் நன்கு ஆறியதும், அந்த நீர் மூலம் தலையை நன்கு அலசவும்.
4.பின்னர் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.
5.15 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை வெறும் தண்ணீரில் அலசிட,நரை முடி பிரச்சினை தீரும் .
6.அடுத்து ஒரு மிக்சியில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு அரைத்து, சாறு எடுத்து கொள்ளவும்.
7.இப்படி அரைத்த வெங்காய சாற்றை கூந்தலில் தடவி, 20 முதல் 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து அலசிட,நரை முடி தொல்லை தீரும் .
8.அடுத்து பாதாமுடன் , ஆலிவ் எண்ணெயைச் சேர்த்து எடுத்து கொள்ளவும் ,
9.அதை நெல்லிக்காய் மற்றும் வெந்தய பொடியுடன் சேர்த்து கலந்து, உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி,வாருங்கள்
10.ஓர் நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டு விட்டு , மறுநாள் காலையில் கூந்தலை அலசிடநரை முடி தொல்லை தீரும் .
11.கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கொதிக்க வைத்து, கூந்தலுக்கு தடவினால்,இளநரை பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment