Join THAMIZHKADAL WhatsApp Groups
மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்புப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது . இப்பயிற்சி , 1 முதல் 74 அணி வரை வழங்கப்பட்டுள்ள நிலையில் , இவ்வணிகளில் பயிற்சிக்கு வருகை புரியாத அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்களுக்கு இணைப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள மையத்தில் தலைமைப்பண்புப் பயிற்சி அளிக்க இணைப்பு -3 ல் குறிப்பிடப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் முதன்மை கருத்தாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இப்பயிற்சியில் இப்பயிற்சியில் பங்கேற்கும் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் / பொறுப்பு தலைமை ஆசிரியர்கள் பட்டியல் ( இணைப்பு -2 ) மற்றும் முதன்மைக் கருத்தாளர்களின் பட்டியல் ( இணைப்பு -3 ) இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் அட்டவணைப்படி பயிற்சியில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் அவர்களை பணியிலிருந்து விடுவிக்க முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்புப் பயிற்சியளித்தல் சார்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!
No comments:
Post a Comment