Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 5, 2023

அரசு ஊழியர்கள் விடுப்பு, முன்பணம், கடன் பெறுவது ஈஸி: அமைச்சர் பி.டி.ஆர் உருவாக்கும் புதிய ஆப்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்காக நிதித் துறை புதிய மொபைல் ஆப் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதில் உள்ள வசதிகளை பற்றி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கும், ஓய்வுபெற்ற அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் புதிய மொபைல் ஆப் (Mobile App) உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பில் தெரிவித்ததாவது, 'தமிழ்நாடு அரசு நிதித் துறையின் மானியக் கோரிக்கை அறிவிப்புகளில் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் மொபைல் ஆப் உருவாக்கப்படும். இந்த மொபைல் ஆப் வாயிலாக எளிதில் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மொபைல் ஆப் மூலம் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வரும் அனைத்து வகையான விடுப்புகள், கடன்கள் மற்றும் முன்பணங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஊதியச்சீட்டு, வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டதற்கான படிவம் 16 (Form 16) ஆகியவற்றையும் இந்த ஆப் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம்.

இந்த மொபைல் ஆப் வழியாக அரசு ஊழியர்கள் மின் பணிப்பதிவேட்டினை பார்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் முடியும்.

இந்த மொபைல் ஆப் வாயிலாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் விடுப்புகால பயணச்சலுகை, பயணப்படி, மாறுதல் பயணப்படி போன்ற தனிப்பட்ட கோரிக்கைகளின் நிலையை கண்டறியலாம்.

ஓய்வூதியதாரர்கள் இந்த மொபைல் ஆப் பயன்படுத்தி வாரிசுதாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யலாம், என்று கூறப்பட்டுள்ள வசதிகளை கொண்டுவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News